UAE Tamil Web

அமீரகத்தில் அதிகரிக்கும் பிச்சைக்காரர்கள்.. துபாயில் கடந்த மூன்று மாதங்களில் 1000 பிச்சைக்கார்கள் கைது..!

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும் ஈத் அல் பித்ர் விடுமுறை காலத்திலும் துபாய் காவல்துறை 1,000 பிச்சைக்காரர்களை கைது செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பிச்சை எடுப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த வகையில் துபாயில் பிச்சை எடுத்த 902 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 321 பேர் ரமலான் மாதத்திற்கு முன்பும், 604 பேர் ரமலானிலும் மற்றும் 75 பேர் ஈத் அல் பித்ர் விடுமுறையின் போது கைது செய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பொதுத் துறையின் (சிஐடி) இயக்குநர் ஜமால் சலீம் அல் ஜல்லாஃப், “ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் மாதங்களில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பிச்சைக்காரர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களுக்கு குழுக்கள் அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டது” என்றார்.

இது தொடர்பாக, ஃபெடரல் ஆணை சட்ட எண் 31, பிரிவு 477 இன் படி, குழுக்கள் மூலம் பிச்சை எடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஆட்களை அழைத்துவரும் நபருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாய் காவல்துறை, பிச்சைக்காரர்கள் குறித்து 901 என்ற எண் மூலம் அல்லது துபாய் காவல்துறை செயலி மூலம் புகார் தெரிவிக்குமாறும்  காவல்துறை குடியிருப்பளர்களை கேட்டுக்கொண்டது.  பிச்சைக்காரர்கள் ஆன்லைனில் பணம் கேட்பது போன்ற சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளில் ஈடுபட்டால் www.ecrime.ae வலைதளத்தில் புகாரளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap