துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு ஓடுபாதை மூடப்படுவதால் சுமார் 1,000 விமானங்கள் துபாய் வேர்ல்ட் சென்ட்ரலுக்கு (DWC) இடமாற்றம் செய்யப்படும் என்று துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
துபாய் சர்வதேச விமான விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒரு ஓடுபாதையை மே மாதம் முதல் 45 நாட்களுக்கு மூடப்பட உள்ளது.
இந்த ஓடுபாதையை மூடல் காரணமாக கோடைகால தொடக்கத்திற்கு முன் விமான சேவைகளும் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காகவும் விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் மே 9 முதல் ஜூன் 22 வரை பராமரிப்பு பணி நடைபெறும் என்று விமான நிலையம் கூறியுள்ளது.
இந்த பராபரிப்பு பணி காரணமாக விமானங்களை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.