39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாய் டூட்டி ஃப்ரீ ரேஃபிள்: நண்பர்களுடன் சேர்ந்து 1 மில்லியன் டாலர் பரிசை வென்ற இந்தியர்

Dubai

துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ரேஃபிள்(Dubai Duty Free Millennium Millionaire raffle) டிராவில் பங்கேற்ற 11 நண்பர்கள் அடங்கிய குழு, 1 மில்லியன் டாலர் பரிசை தட்டி சென்றுள்ளனர்.

துபாயை சேர்ந்த 41 வயதான ராகுல் சங்கோல்(Rahul Sangole) என்ற இந்தியர், கடந்த ஜூலை மாதம் மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 336 -ல் தனது அதிர்ஷ்ட டிக்கெட் எண் 0226-ஐ வாங்கினார்.இந்த அதிர்ஷ்ட டிக்கெட்டை வாங்கிய செலவை தனது ஒரு நேபாளி மற்றும் 9 இந்திய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதனால் நண்பர்கள் 11 பேர் இணைந்து அதிர்ஷ்டத்தை சுமந்து வந்த டிக்கெட்டை வாங்கியதாக கணக்கானது.

ராகுல் சங்கோல் கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார். ஜெபல் அலி ஃப்ரீஜோனில்(Jebel Ali Freezone) பணிபுரிந்து வரும் இவர் ஒரு குழந்தைக்கு தந்தை ஆவார். துபாய் டூட்டி ஃப்ரீயில் வாங்கிய டிக்கெட்டிற்கு, 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது என்ற செய்தியை கேட்டதும் இவரால் உற்சாகத்தை அடக்க முடியவில்லை.

அந்த உற்சாகத்துடனே பேட்டியளித்த ராகுல் சங்கோல், இந்த லக்கி டிராவில் கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் பங்கேற்று வருகிறோம். இறுதியாக 1 மில்லியன் டாலர்களை வென்றுள்ளதாக துபாய் டூட்டி ஃப்ரீயிடமிருந்து அழைப்பை பெற்றுள்ளதை நினைத்தால் உண்மையில் நம்ப முடியவில்லை என்று கூறிய ராகுல், மக்களின் கனவை நனவாக்கும் துபாய் டூட்டி ஃப்ரீக்கு மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்த கடினமான நேரத்தில் நாங்கள் வென்றுள்ள இந்த பணம் கடன்களை அடைக்கவும், எங்களை மட்டுமே சார்ந்திருக்கும் எங்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினரை ஆதரிக்க வீடு திரும்பவும் நிச்சயம் உதவும் என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ரேஃபிளில், இந்திய நாட்டினர் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். கடந்த 1999-ம் ஆண்டு மில்லினியம் மில்லியனர் துவங்கியதிலிருந்து, 1 மில்லியன் டாலர்களை வெலும் 166-வது இந்திய நாட்டவராக உள்ளார் இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த சங்கோல்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!