UAE Tamil Web

ஐக்கிய அரபு அமீரகத்தால் தான் நான் உயிர் பிழைத்தேன்… இனி அபுதாபி தான் என் தாய்… அரிய வகை புற்றுநோயால் அவதிப்பட்ட 11 வயது சிறுமி… மீண்டெழுந்த மாஸ் அனுபவம்

பாகிஸ்தானை சேர்ந்த 11 வயதான நஹ்ல் காலிட், குழந்தை மருத்துவர்களின் மாநாட்டில் பேசிய பேச்சு அனைவரையுமே சிலிர்க்க வைத்து இருக்கிறது. வெள்ளை இரத்த அணுக்களில் ஏற்படும் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவுடன் போராடினார்.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபுதாபியில் உள்ள புர்ஜீல் மெடிக்கல் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு லுகேமியாவிற்கு வெற்றிகரமான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (பிஎம்டி) செய்யப்பட்டது.

தற்போது குழந்தை மருத்துவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட நஹ்ல் தனது கேன்சர் வாழ்க்கையின் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார். அபுதாபி மருத்துவக் குழுவின் அயராத முயற்சிகளுக்கு என் பாராட்டுக்கள். அவர்கள் தந்த உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையால் தான் நான் இங்கு நிற்கிறேன்.

எனது கடந்த வருடப் பயணம் முழுவதும் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். எனக்கு வந்திருக்கும் கேன்சர் அல்லது அதற்கு எடுக்கப்படும் சிகிச்சை குறித்தோ நான் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. இதன் விளைவாக என் முடி உதிர்ந்தது. தினமும் ஊசிகள் பலமுறை குத்துவதால் வலி கொடுமையாக இருக்கும். அப்போதெல்லாம் என்னுடைய இருந்த மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் அதிக ஆதரவு கொடுத்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரில் தான் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கீமோதெரபியின் போது நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, ​​என் தந்தையிடம் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. அப்பா, நாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கிறோம் என்பதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி. நாம் வேறு இடத்தில் இருந்தால், இதையெல்லாம் எப்படி சமாளிக்க முடியும்? என்னைக் கவனித்து, இந்த வாய்ப்பை வழங்கியதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் மன்னருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

கடந்த 20 ஆண்டுகளாக அபுதாபியில் வசிக்கும் அவரது தந்தை காலித் ஃபயாஸ், ஏறக்குறைய ஒரு வருடமாக தனது மகள் அனுபவித்த வலி பற்றி கூறி கண்ணீர் விட்ட சம்பவம் பார்ப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. இந்த பயங்கரமான நோயைக் கண்டறியும் வரை அவள் மிகவும் சுறுசுறுப்பான குழந்தையாக இருந்தாள். ஏறக்குறைய ஒரு வருடமாக அவள் இந்த போராட்டத்தில் இருக்கிறாள். இந்த
மாநாட்டில் கலந்துகொண்டபோது, வலி மற்றும் சகிப்புத்தன்மையின் அனைத்து தருணங்களும் அவரது மனதில் பளிச்சிட்டதாக ஃபயாஸ் குறிப்பிட்டார்.

“அந்த பயங்கரமான நாட்களின் நினைவுகளையும், எங்களுடன் நின்றவர்களின் முகங்களையும், பயமும் நம்பிக்கையும் நிறைந்த பகல் மற்றும் இரவுகளை நான் நினைவு கூர்ந்தேன். அவளுக்கு 24 நாட்கள் காய்ச்சல் இருந்தது. மூன்று மாதங்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது. அவளது தாய் அவளுடன் இருந்து, உடல் மற்றும் மனரீதியான அனைத்து சிரமங்களையும் எதிர்கொண்டார்.

பர்ஜீல் மெடிக்கல் சிட்டி, பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனை, சிகாகோ பல்கலைக்கழகம், குழந்தைகள் தேசிய மருத்துவமனை, யுஎஸ், சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனை, யுஎஸ், பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை, யுஎஸ், அமெரிக்கன் ஹாஸ்பிடல், யுஏஇ, என்எம்சி ராயல் மருத்துவமனை மற்றும் கிளெமென்சோ ஆகியவற்றுடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமன் மற்றும் சவுதி அரேபியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 தேசிய மற்றும் 18 சர்வதேச பேச்சாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap