UAE Tamil Web

தமிழகத்தில் இருந்து அமீரகத்திற்கு ஒரே ஆண்டில் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி -அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ஏற்றுமதியை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயா்த்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் அன்பரசன் தெரிவித்தாா்.

இந்திய மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமான (CEPA) குறித்து தொழில் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பரசன் கூறுகையில்:

தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு பம்புகள், மசாலா பொருள்கள், முத்துகள், ஆபரணங்கள் உள்பட பல பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் ரூ.11,000 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தமிழக ஏற்றுமதியை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயா்த்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றாா் அவர் கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap