UAE Tamil Web

ஒரே வாரத்தில் 11,000 பேர் விசிட் அடித்த ஷேக் சயீத் கிராண்ட் மஸ்ஜித்!

உலகின் பிரமாண்டமான பள்ளிவாசல்களில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மஸ்ஜித். கலைநயத்துடனும் அதிக பொருட்செலவுடனும் கட்டப்பட்ட இந்த மஸ்ஜித்தான் அமீரகத்திலேயே மிகப்பெரிய பள்ளிவாசலாக திகழ்கிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக அரபு கட்டிட கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த மஸ்ஜித்திற்கு மொழி, இன, மத வேறுபாடின்றி உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ள நிலையில் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட ஈதுல் அழ்ஹா பெருநாளையொட்டி 11,614 பேர் ஷேக் சயீத் கிராண்ட் மஸ்ஜித்தை விசிட் அடித்துள்ளனர். இதில் 2,530 பேர் வழிபாட்டிற்காக வந்து சென்றுள்ளனர். மீதமுள்ள 8,542 பேர் ஷேக் சயீத் கிராண்ட் மஸ்ஜித்தின் அற்புத கலைநயத்தை கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகள்.

Behind the scenes of Sheikh Zayed Grand Mosque | by fatma a | Mediumஇதேபோல நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 2,35,700 பேர் ஷேக் சயீத் கிராண்ட் மஸ்ஜித்திற்கு வருகை புரிந்துள்ளனர்.  இதில் 65,500 தொழுகையாளிகளும் 1,26,000 சுற்றுலா பயணிகளும் அடங்கும். மஸ்ஜித்திற்கு சென்று வந்த மொத்தமுள்ள 2.35 லட்சம் பேரில் 54% பேர் அமீரகவாசிகள் என்றும் இதர மக்கள் அனைவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்பது கவனிக்கத்தக்கது. வியக்க வைக்கும் பிரமாண்டங்கள் நிறைந்த ஷேக் சயீத் கிராண்ட் மஸ்ஜித் சுற்றுலா பயணிகள் அவசியம் பார்வையிட வேண்டிய முக்கியமான இடங்களுள் ஒன்று என்றே சொல்லலாம். பள்ளிவாசலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஷேக் சயீத் கிராண்ட் மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு, இஸ்லாம் போதிக்கும் முக்கியமான விழுமியங்கள் உள்ளிட்டவை எடுத்துக் கூறப்படுகின்றன. இதேபோன்ற பிரமாண்டமான மஸ்ஜித்தை இந்தோனேசிய அரசு ஒரேநேரத்தில் 10,000 பேர் தொழக் கூடிய வகையில் தங்கள் நாட்டிலும் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

2 Shares
Share via
Copy link