துபாய் பேருந்து விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.!

Image Credits: Khaleej Times

ரமலான் பண்டிகைக்காக ஓமனிலிருந்து துபாய் வந்துவிட்டு மீண்டும் ஓமன் திரும்பிக்கொண்டிருந்த பேருந்து (ஜூன் 6) விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Source: Consul General of India

இந்த விபத்தில் பலியானவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இறந்தவர்களில் 8 இந்தியர்களின் பெயரை India in Dubai தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் 12 பெயர்களையும் இந்திய தூதரக தலைவர் Vipul தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது வரை மருத்துவமனையில் இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொடூரமான விபத்தின் காரணமாக ஏற்பட்ட காயத்தினால் 6 பேர் யார் என்று அடையாளம் காண முடியாத நிலை உருவாகியுள்ளது. 12 இந்தியர்கள் இறந்துள்ள நிலையில் 4 இந்தியர்கள் ரஷீத் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்திற்கு துபாய் போலீஸ், India in Dubai, இந்திய தூதரக தலைவர் மற்றும் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Loading...