UAE Tamil Web

அஜ்மானில் பள்ளி பேருந்து மோதியதில் 12 வயது மாணவி உயிரிப்பு

அஜ்மானில் பள்ளி பேருந்து மோதியதில் 12 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அஜ்மான் காவல்துறை கூறுகையில், இந்த சோகமான சம்பவம் செவ்வாய்கிழமை நேற்று மாலை 3.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி உம்மு அம்மார் பள்ளி படித்து வருகிறார்.

மாணவி தனது வீடு அருகே பள்ளி பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு செல்ல முயன்றபோது டிரைவர் சிறுமியை கவனிக்காமல், பேருந்தை நகர்த்திச் சென்றார். இதனால் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு காவல்துறை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் விரைந்தனர்.

ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்குள் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பேருந்து ஓட்டுநரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பேருந்தில் கண்காணிப்பாளர் இல்லை என தெரியவந்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து மற்றும் ரோந்து நிர்வாகத்தின் இயக்குனர் சைஃப் அப்துல்லா அல் ஃபலாசி, அஜ்மான் காவல்துறை உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்தார். பேருந்து ஓட்டுநர்கள் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிக்குமாறும், ஓட்டுநர்கள் தங்களது கவனத்தைத் திசைதிருப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap