இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதின்மூன்று பேர் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான ஏழு நிறுவனங்கள் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அபுதாபி குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அவர்கள் பொருளாதார நடவடிக்கைகளை நடத்திய பொழுது விற்பனை புள்ளிகள் (பிஓஎஸ்) மூலம் உரிமம் பெறாத 510 மில்லியன் திர்ஹம் மதிப்புடைய கடன்களை திருப்பி செலுத்தாதது தெரியவந்துள்ளது.
நான்கு பேருக்கும் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், அதைத் தொடர்ந்து நாடுகடத்தலும் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு 5 மில்லியன் திர்ஹம் முதல் 10 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றத்தில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு தலா 10 மில்லியன் திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிமன்ற குழு ஒரு “குற்றவியல் அமைப்பை” நிறுவி அதன் விசாரணையை முழு வீச்சாக தொடங்கியது. இதன் மூலம் உரிமம் இல்லாத பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு டிராவல் ஏஜென்ட் தலைமையகத்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதன் மூலம் அவர்கள் அரை பில்லியன் திர்ஹாம்களுக்கு மேல் சம்பாதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழுவானது கருப்பு பணத்தினை வெள்ளைப் பணமாக மாற்ற ஒரு விரிவான மோசடியை நடத்தியுள்ளது.
அவர்கள் வாடிக்கையாளர்களுக்குப் பணமாகச் செலுத்துவார்கள், பின்னர் அவர்களது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி தங்கள் நிறுவனங்களின் பிஓஎஸ் மூலம் போலி கொள்முதல் செய்வார்கள்.
சில சமயங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம், மற்றொரு மோசடியான பிஓஎஸ் பரிவர்த்தனை செய்து, பின்னர் வட்டித் தொகையைக் கழிப்பதன் மூலம் கிரெடிட் கார்டு கடன்களைத் தீர்க்க உதவுவார்கள்.
நிதித் தகவல் பிரிவு (FIU) வழங்கிய வங்கி பரிவர்த்தனை அறிக்கைகள் மற்றும் நிதி பகுப்பாய்வு அறிக்கைகளின் படி பிரதிவாதிகள் மற்றும் அவர்களது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு குறுகிய காலத்தில் கணிசமான பணப் புழக்கங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
அவர்கள் செய்யும் தொழில் மூலம் இத்தகைய பெரிய தொகையை ஈட்ட முடியாது என்பதால் குற்றம் ஆனது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியினர் செய்த இந்த செயலானது அரபு நாட்டில் வாழும் இந்தியர்கள் அனைவரிடமும் தற்பொழுது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.