UAE Tamil Web

துபாயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி தமிழக இளைஞரிடம் 14 லட்சம் ரூபாய் மோசடி!

துபாய் விமான நிலையத்தில் வேலை என்ற விளம்பரத்தை நம்பி 14.40 லட்சம் ரூபாயை இழந்த ராமநாதபுர இளைஞர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவரங்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமரன் என்பவர் 2 ஆண்டுகள் சவுதி பணிபுரிந்து உள்ளார். தற்போது சொந்த ஊரில் இருக்கும் இவர், துபாயில் வேலை வாய்ப்பிற்காக இணையதளம் மூலம் சில நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து உள்ளார்.

செந்தில்குமரன் வாட்ஸ்-ஆப்புக்கு 82598 08037 என்ற நம்பரில் இருந்து, துபாய் விமான நிலையத்தில், ‘எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர்’ வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக, 2021 மார்ச் 6 அன்று தகவல் வந்தது. செந்தில்குமரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு, அவர்கள் தெரிவித்தபடி விசா, விண்ணப்பம், பதிவுக் கட்டணம் போன்றவற்றிற்காக வங்கி கணக்குகளில் 14 லட்சத்து 40 ஆயிரத்து 521 ரூபாய் வரை செலுத்தியுள்ளார்.

பின்னர், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, தற்போது ஆள் எடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து நடவடிக்கையில் இருப்பதாக, மார்ச் 3 அன்று செந்தில்குமரனுக்கு மெசேஜ் வந்தது.

இதனையடுத்து மேற்கண்ட மொபைல் போனை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி 14.40 லட்சத்தை திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு செந்தில்குமரன் ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap