UAE Tamil Web

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: புதிதாக பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள்.!

radar

உம் அல் குவைன் : வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, உம் அல் குவைன் சாலைகளில் புதிதாக 14 ரேடார்கள் பொருத்தும் பணி நிறைவடைந்தது என உம் அல் குவைன் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து பிரிவு அறிவித்திருக்கிறது.

- Advertisment -

உம் அல் குவைனின் நெடுஞ்சாலைகள் மற்றும் உள் சாலைகளில் இந்த ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து உம் அல் குவைன் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், இந்த ரேடார்கள் சாலை விபத்தை குறைக்கவும் பாதசாரிகளுக்கு உதவவும் வாகனங்களின் வேகத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் உதவும் என்றார்.

உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள புள்ளிவிபரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த வருடம் (2019) நிகழ்ந்த வாகன வேக விதிமீறல்கள் (8,730,264), 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாகன வேக விதி மீறல்களை (8,896,705) விட குறைவாகும்.

அமீரக பெடரல் போக்குவரத்து சட்டத்தின்படி, மணிக்கு 80 கிலோமீட்டருக்கு அதிகமான வேகத்தில் வாகனத்தை இயக்குபவர்களுக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுவதுடன், 23 கரும்புள்ளிகள் வழங்கப்படும். மேலும், வாகனமானது 60 நாட்களுக்கு சிறைபிடிக்கப்படும்.