UAE Tamil Web

துபாய்: அடுத்தடுத்து மோதிச் சிதறிய 15 வாகனங்கள் – ஸ்தம்பித்த சாலை..!

-ACCIDENT-

துபாயில் உள்ள எமிரேட்ஸ் சாலையில் இன்று 15 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஷார்ஜா செல்லும் எமிரேட்ஸ் சாலையில் அல் குத்ரா மேம்பாலத்தைத் தாண்டி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழுதிப் புயலால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வாகனவோட்டிகள் கவனமாக பயணத்தைத் தொடருமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.