அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அமீரக அரசுக்குத் தலைமையேற்று 15 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,” எனது சகோதரரும் அமீரகத்தின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய கனவை நான் நிறைவேற்றியிருக்கிறேன். அமீரக மக்களுக்கு வேண்டிய சேவைகளை நான் புரிந்திருக்கிறேன். இந்த 15 வருடங்களில் பல உள்ளூர் மற்றும் பெடரல் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அமீரகத்தின் தலைவரின் திட்டங்களை செயல்படுத்த நாங்கள் ஒற்றுமையாக உழைத்தோம்”
الإخوة والأخوات .. أبناء شعب الإمارات .. نكمل ١٥ عاماً في ٢٠٢١ في رئاسة حكومة دولة الإمارات .. عملنا على تحقيق رؤية أخي رئيس الدولة حفظه الله .. وبذلنا وسعنا لخدمة شعب الاتحاد .. هذه رسالتي .. https://t.co/P8ViMHoyyE
— HH Sheikh Mohammed (@HHShkMohd) January 3, 2021
அரசாங்கத்தில் பல முக்கிய திட்டமிடல்களை நாங்கள் நிகழ்த்தியிருக்கிறோம். 50 க்கும் மேற்பட்ட சட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றங்களைச் செய்துகாட்டியிருக்கிறோம்” என ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் சாதனைகளாக ஆட்சியாளர் வெளியிட்ட பட்டியல் கீழ்வருமாறு:
- 500 க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் ஸ்மார்ட் சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
- பெடரல் பட்ஜெட் இரட்டிப்பிற்கும் கூடுதலாக உயர்ந்திருக்கிறது (130%)
- 121 குறியீடுகளின் அடிப்படையில் அமீரகம் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது.
- உலகின் வலிமையான பாஸ்போர்ட்டாக அமீரக பாஸ்போர்ட் இருக்கிறது.
- 95 சதவீத அமீரக குடியிருப்பாளர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.
- அரபு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் அமீரகத்தினுடையது.
- பிராந்தியத்தில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதன்மை நாடாக அமீரகம் இருந்துவருகிறது.
- வீட்டுவசதியில் 40 பில்லியன் திர்ஹம்ஸ் தொகையை அமீரகம் முதலீடு செய்துள்ளது. கல்வியில் 140 பில்லியன் திர்ஹம்ஸ் தொகையும், சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் 94 பில்லியன் திர்ஹம்ஸ் தொகையும், 50 பில்லியன் திர்ஹம்ஸ் தொகை சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.