ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அந்நாட்டு அரசு படையினருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது.
இதில் சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக இயங்கி வருகிறது. சவுதிக்கு ஆதரவாக அமீரகமும் இருந்து வருகிறது.
இந்நிலையில் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் அட்னாக் எண்ணெய் நிறுவனத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால், கடந்த மாதம் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இந்தியர் உட்பட மூவர் பலியாகினர்.
இதனையடுத்து சவுதி அரேபியா ஜிசான் நகரில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய வெடி குண்டு நிரப்பப்பட்ட ஆளில்லா ட்ரோன் விமானத்தை சவுதிப் படை இடமறித்து அழித்தது.
அழிக்கப்பட்ட குண்டுகளின் துண்டுகள் கீழே விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. அதில் 16 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர், மூவர் உயிருக்கு போராடிய வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.