UAE Tamil Web

அஜ்மானில் வாகனத்திலிருந்த LAPTOP-ஐ திருடிய 16 வயது சிறுவன் கைது

அஜ்மான் அல் ஜுர்ஃப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து லேப்டாப் திருடியதற்காக 16 வயது சிறுவன் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் அகமது சயீத் அல் நுஐமி கூறுகையில், “அஜ்மான் போலிஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டு நோக்கத்துடன் பல வாகனங்களின் பூட்டைத் திறந்திருப்பது தெரியவந்தது. போலிஸார் உடனடியாக அந்த சிறுவனை அடையாளம் கண்டு சில மணிநேரங்களில் கைது செய்தனர்” என்றார்.

மேலும் அந்த சிறுவன விசாரணை செய்ததில், அவரது குடும்பத்தில் சில நிதி நெருக்கடிகள் இருப்பது தெரியவந்தது, இதனால் அவர் திருட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாத்து, விலைமதிப்பற்ற பொருட்களை வாகனத்திற்ளாப்குள் விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறு அல் நுஐமி கேட்டுக்கொண்டார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap