UAE Tamil Web

ஒருநாளைக்கு 160,000 பயணிகள் – பரபரப்பின் உச்சத்தில் துபாய் விமான நிலையம்..!

DXB

உலகின் மிகவும் பிசியான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 160,000 பயணிகள் வருவதாக குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறை இயக்குனரகத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 22, 2021) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறை இயக்குனரகத்தின் (GDRFA) தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் அப்துல்லா அகமது அல் மர்ரி,” ஒரு நாளைக்கு 160,000 பயணிகள் துபாய் விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஒரு நாளைக்கு 60,000 பயணிகளை வரவேற்கிறது” என்றார்.

துபாயில் நடைபெற்றுவரும் பிரம்மாண்ட துபாய் எக்ஸ்போ கண்காட்சி, ஷேக் சயீத் திருவிழா, மீண்டும் திறக்கப்பட்ட குளோபல் வில்லேஜ், துபாய் விற்பனைத் திருவிழா என அமீரகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வரும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. மேலும் வரவிருக்கும் குளிர்கால விடுமுறை மற்றும் அமீரக தேசிய தின விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap