UAE Tamil Web

தமிழக காய்கறி என்றால் சும்மாவா.. ஷார்ஜாவுக்கு ஏற்றுமதியாகும் 17 டன் காய்கறிகள்

கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் தினமும் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தற்போது வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானத்தில் 168 பயணிகளுடன், 3.5 டன் கார்கோ எடுத்து செல்லப்படுகிறது. நடப்பு மாதம் மட்டும் இந்த விமானத்தில் காய்கறி அதிக அளவு எடுத்துச் செல்லப்படுகிறது.

இது குறித்து விமான நிலைய அதிகாரி தெரிவித்ததாவது, “முன்னதாக கோவை – ஷார்ஜா இடையே இயக்கப்பட்டு வரும் விமானத்தில் காய்கறி, காஸ்டிங்ஸ் போன்ற தொழிற்சாலை சார்ந்த கார்கோ எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் இம்மாதம் ஆரம்பத்திலிருந்து அதிகளவிலான காய்கறி மட்டுமே எடுத்துச் செய்யப்படுகிறது.

வாரந்தோறும் கோவை முதல் ஷார்ஜா இடையே இயக்கப்படும் 5 விமானங்களில், 17.5 டன் காய்கறி வகைகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

காய்கறி அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு, ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு முன்பு வரை 3.5 டன் கார்கோ அனுப்பப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதம் பயணிகள் மற்றும் லக்கேஜ் அளவு குறைவாக வருவதால், 6 டன் காய்கறி அனுப்பப்பட்டுள்ளது” இவ்வாறு விமான அதிகாரி தெரிவித்தார்.

2 Shares
Share via
Copy link