ஷார்ஜாவில் மகன் ஓட்டிய கார் மோதி தாய் பலியான சோகம்..!

17-year-old boy runs over mother in UAE freak accident

ஷார்ஜாவில் 17 வயது இந்திய மாணவன் கார் ஓட்டி பயிற்சி செய்த போது, பூங்காவிற்கு வெளியே அமர்ந்திருந்த தன் தாய் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக காலை 8:58 மணிக்கு ஆபரேஷன் அறையில், தங்களுக்கு அழைப்பு வந்ததாக ஷார்ஜா போலீசார் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக ரோந்து அதிகாரிகள், ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பினர்.

இதனை அடுத்து, காவல்துறையினர் அந்தப் பெண்ணை அல் காசிமி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டது.

இந்த 17 வயது சிறுவன், இந்தியப் பள்ளியின் கிரேடு 12 மாணவன் என்றும், அவன் ஓட்டுநர் பயிற்சி வகுப்புகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், அவரது நண்பர்கள் கலீஜ் டைம்ஸிடம் (Khaleej Times) தெரிவித்தனர். கூடுதலாக அவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர்கள் இந்தியா, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்த சிறுவன் 5 உடன்பிறப்புகளில் மூத்தவன் என்பதும் கூடுதல் தகவல்.

அதிகாரிகள் அந்த சிறுவனை காவலில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Loading...