UAE Tamil Web

அமீரகத்தில் தொடரும் சோகம்: கடலின் மூர்க்கத்தனத்தால் உயிரிழந்த 9 ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன்..!

beach

ராஸ் அல் கைமாவில் தனது உறவினர்களுடன் கடலில் நீந்தச் சென்ற அப்துல் அஜீஸ் மர்வான் அல் சேஹி (17) என்னும் சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் ஒன்பதாம் வகுப்புப் படிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனுடன் கடலில் நீந்தச் சென்ற அவனது உறவினர் அப்துல்லா முகமது அல் சேஹி இதுகுறித்துப் பேசுகையில்,” நீந்தச் சென்ற எங்களது குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களுள் சேஹி தான் வயது குறைந்தவன். கடலில் இறங்கும்போதே அலைகள் ஆர்ப்பரித்தன. இதனால் சீக்கிரமாகவே நாங்கள் கரையேறிவிட்டோம். அப்போது சேஹியைக் காணவில்லை. உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீரில் மிதந்த சேஹியை கரைக்கு கொண்டுவந்தாலும் அவன் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவன் சக்ர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டான். ஆனால் வரும் வழியிலேயே சேஹி மரணடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

சமீப நாட்களில் அமீரகத்தில் கடலின் மூர்க்கத்தனத்திற்கு 5 வயது சிறுவன் ஒருவனும் இந்தியாவைச் சேர்ந்த 32 வயதான இளம் தாய் ஒருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இப்போது 17 வயது சிறுவனின் மரணமும் இதே போன்றதே. இதில் நாம் கவனிக்க வேண்டியது. இம்மாதிரியான விபத்துக்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளிலேயே நேர்ந்திருக்கின்றன.

தங்களது ஓய்வு நேரத்தினை கழிக்க கடற்கரைக்கு வருபவர்கள் சடலங்களாய் கரையொதுங்குவது அனைவரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. இம்மாதிரியான விபத்துக்களைத் தவிர்க்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்டில் தெரிவியுங்கள்.

beach
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap