17 வயதுடைய அமீரக சிறுவர் புஜைரா கடலில் மூழ்கி பலி!

A young Emirati drowned at Fujairah Corniche in Al Madhalat on Sunday night, according to local reports.

அமீரகத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் புஜைரா கடற்கரையில் குளித்து கொண்டிருக்கும் போது கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான அந்த அமீரக சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புஜைராவில் உள்ள Al Madhalat கடற்கரையில் மூழ்கி இறந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த சிறுவன் தனது சகோதரர்களுடன் கடற்கரைகரைக்கு சென்றுள்ளார். அங்கே குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கடலில் சிக்கி தத்தளித்ததை பார்த்த அவரின் மூத்த சகோதரர் காப்பாற்ற முயன்றுள்ளார். பிறகு அருகே இருந்தவர்களை உதவிக்கு அழைத்தும் அந்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நடந்ததாக துபாய் காவல் துறையின் தளபதி பிரிகேடியர் முகமது அகமது பின் கானிம் அல் காபி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர். அந்த சிறுவனுக்கு (சிபிஆர்) எனப்படும் இருதயம் மற்றும் நுரையீரல் புத்துயுர் வழங்கியும் அந்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அவரின் உடல் புஜைரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Source: Khaleej Times

Loading...