UAE Tamil Web

அமீரகத்தில் 30 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. 19 பேருக்கு காயம் – முழு வீச்சில் செயல்படும் மீட்பு குழுவினர்

அபுதாபியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது, அல் ஜாஹியா பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பல குழுக்கள் பணியாற்றி வருவதாக அபுதாபி காவல்துறையின் ட்வீட் தெரிவித்துள்ளது.

30 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. உடனடியாக அதில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 19 பேர் இந்த தீ விபத்தில் காயம் அடைந்தனர். “லேசானது முதல் மிதமான காயங்கள்” அடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வு குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு அமீரகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல இந்தியர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் அந்த விபத்தில் சிக்கி ஒரு இந்தியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். வெயில் காலத்தில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க அமீரக அரசு முழு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap