35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

அஜ்மானில் மூன்று கார்களைத் திருடிய 19 வயது ஆசிய இளைஞர் கைது!

car thief ajman

அல் நுவைமியா (Al Nuaimia) பகுதியில் மூன்று கார்களைத் திருடியதாக 19 வயது ஆசிய இளைஞரைக் கைது செய்துள்ளது அஜ்மான் காவல்துறை.

அஜ்மான் காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குனரான லெப்டினன்ட் கர்னல் அகமது சையித் அல் நுவைமி (Ahmed Saeed Al Nuaimi) இதுகுறித்துப் பேசுகையில்,” கார்கள் திருடு போனது பற்றிய தகவல்கள் கார் உரிமையாளர்களால் போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கிய போலிஸ், ஷார்ஜாவிலுள்ள குற்றவாளியின் தங்குமிடத்திலேயே அவரைக் கைது செய்தது” என்றார்.

அந்த இளைஞர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மூன்று வாகனங்களும் உரிமையாளர்களிடம் நான்கு நாட்களுக்குள்ளாக ஒப்படைக்கப்படும் எனவும் நுவைமி தெரிவித்தார்.

கார்களைத் திருடிய இளைஞர் மீது பொது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய லெப்டினன்ட் கர்னல், வாகன ஓட்டிகள் தங்களது கார்களை பாதுகாப்பில்லாத பகுதிகளில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது” என்றார்.

 

மற்ற சில பதிவுகள்