அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.55 மணிக்கு அமீரக எல்லைக்குட்பட்ட ஓமான் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை மையத்தின் (NCM) தேசிய நில அதிர்வு வலையமைப்பு தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 2.7 ஆக பதிவாகியிருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட மெர்கலி இண்டென்சிட்டி ஸ்கேலின் படி 3 முதல் 4 நில அதிர்வுகள் ஏற்பட்டதாக NCM தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் உணரக்கூடிய வகையில் இருந்தாலும் பொதுமக்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.