UAE Tamil Web

ஹலோ..நான் பேங்க் ல இருந்து பேசுறேன்.. உங்க பின் நம்பர கொஞ்சம் சொல்லுங்க.. அபுதாபியில் மோசடி இளைஞர்கள் இருவருக்கு சிறை!

அபுதாபியில் பொதுமக்களுக்கு தொடர்ந்து கால் செய்து வங்கி விபரங்களை கேட்டு பணம் பறித்த 2 இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் குறுக்கு வழியில் சம்பாதித்து போலீசிடம் மாட்டிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் அபுதாபியில் வசித்த ஆசிய நாடுகளைச் சேர்ந்த இருவர் வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து வங்கிக் கணக்கு விபரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என கூறி ரகசிய குறியீட்டு எண்களை பெற்று பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் மொபைல் போன்களில் குறுஞ்செய்தி அனுப்பியும் இந்த நூதன மோசடியை செய்து வந்தனர். ஒருசிலர் டிமிக்கி குடுத்த நிலையில் பலர் பணத்தை இழந்து புகார் அளித்தனர். தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் அஜ்மன் போலீசார் உதவியுடன் அபுதாபி போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதையடுத்து அபுதாபியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

UAE: New eCall system to alert police about accidents within seconds - News  | Khaleej Times

பொதுமக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் இருந்து கவனமாக இருக்க அறிவுறுத்திய போலீசார், வங்கி விபரங்களை வெளியில் யாருக்கும் எக்காரணத்தை கொண்டும் பகிரக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் 8002626 or 2828 என்ற எண்ணிலோ அல்லது aman@adpolice.gov.ae மின்னஞ்சலிலோ இதுபோன்ற புகார்களை பதிவு செய்யலாம் என அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

1 Share
Share via
Copy link