அபுதாபி பிக் டிக்கெட்டின் வாராந்திர டிராவில் இந்தியாவின் தாரிக் சேக் என்பவருக்கு 3 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
கத்தாரில் வசிக்கும் தாரிக் ஷேக் வெற்றிபெற்றது குறித்து கூறுகையில், “ஒரு வருடமாக எனது நண்பர்களுடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன். ரமலான் மாதத்தில் பிக் டிக்கெட் போட்டியில் கென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை எனது நண்பர் ஒருவருக்கு வழங்க உள்ளேன். இதன் மூலம் அவர் அவரது சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்துவார்” என்றார்.
மேலும் கூறிய தாரிக் சேக், தனது 2 வயது மகன் தான் டிக்கெட்டை தேர்வு செய்ததாகவும், அந்த எண் தற்போது வெற்றிபெற்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் தாரிக் சேக், மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான 12 மில்லியன் திர்ஹம்ஸ் டிராவில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..