UAE Tamil Web

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் 2,000 குழந்தைகள் உயிரிழப்பு -ஐ.நா. அறிக்கை

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் 2,000 குழந்தைகள் போரில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே 2014 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா, பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏமனில் உள்ள பல்வேறு இடங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயிற்சி வகுப்புகள் போன்று சிறுவர் – சிறுமியரை தாக்குதலுக்கு உட்படுத்துகின்றனர். முகாம்களில் குழந்தைகளுக்கு ஆயுதங்களை கையாள்வது, வான்வெளி தாக்குதலில் இருந்து தப்பிப்பது குறித்து கற்பிக்கப்பட்டகிறது. பல முகாம்களில் பங்குபெற அழைத்து செல்வதாக கூறி குழந்தைகளை போரில் ஈடுபடுத்துகின்றனர்.

அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி.. பெரும் விபத்தை முறியடித்த அமீரகம்..!

கடந்த 2020 ஜனவரி முதல் 2021 மே வரை காலகட்டத்தில், 10 – 17 வயது வரையில் 2,000 சிறுவர் – சிறுமியர் போரில் உயிரிழந்துள்ளனர்”. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap