அமீரகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற Mahzooz Drawவின் 80வது வாராந்திர நேரடி மஹ்சூஸ் கிராண்ட் டிராவின் போது 1,197 வெற்றியாளர்கள் மொத்த பரிசுத் தொகையாக 1,710,550 திர்ஹம்களை வெற்றி பெற்று தங்கள் அதிர்ஷ்ட தேவதையை கண்டுள்ளனர்.
மேலும் 21 வெற்றியாளர்கள் தலா Dh47,619 உடன் வெளியேறினர், அவர்கள் அனைவரும் வெற்றி பெற்ற ஐந்து எண்களில் நான்கைப் பொருத்திய பின்னர் இரண்டாவது பரிசான Dh1 மில்லியன் தொகையை பகிர்ந்து கொண்டனர்.
அதே நேரத்தில் இந்த வார ரேஃபிள் டிராவில் மூன்று வெற்றியாளர்கள் தலா 1,00,000 திர்ஹம்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ராஃபிள் ஐடிகள் முறையே வீரா, நார்மன் மற்றும் சியாமுக்கு சொந்தமான 15336471, 15521074 மற்றும் 15421945 எண்கள் ஆகும்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் சிறந்த பரிசான 10,000,000 திர்ஹம் இன்னும் வெல்வதற்காகக் காத்திருக்கிறது என்பது தான். வரும் ஜூன் 18 அன்று அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும் கிராண்ட் டிராவில் மீண்டும் ஒருமுறை இந்த பரிசு தொகையை வெல்ல வாய்ப்பு உள்ளது.