UAE Tamil Web

அமீரகத்தில் 21 வயதிற்கு மேற்பட்டோர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வாங்குவது எப்படி..? விபரம் இதோ..

அபுதாபி (ADIHEX) சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியின் உயர் ஏற்பாட்டுக் குழு கண்காட்சியாளர்களுக்காக “வேட்டை துப்பாக்கிகள் துறைக்கான வழிகாட்டுதல்களை” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆயுதங்கள் வாங்குவது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் வேட்டையாடும் ஆயுதங்களின் விற்பனை பல்வேறு தேவைகள், நடைமுறைகள் மற்றும் முன் நிபந்தனைகளுக்கு உட்படடுத்தப்பட்டுள்ளது.

இதில் மற்ற நாட்டவர்களும் வேட்டையாடும் ஆயுதங்களை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அதற்கான குண்டுகள் மற்றும் வகைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு தங்கள் நாட்டிலிருந்து தடையற்ற சான்றிதழை பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான அனுமதி பெறுவது எப்படி?

  • UAE உள்துறை அமைச்சகம் மற்றும் அபுதாபி போலீஸ் GHQ மூலம் உரிமம் பெறலாம்.
  • 21 வயதிற்கு மேற்பட்ட அமீரகவாசிகள் அபுதாபி சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில் (ADIHEX) ஆயுதங்களை வாங்கலாம்.
  • பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் வேட்டையாடும் ஆயுதங்களை வாங்க அனுமதி அளிக்கப்படுகிறது, ஆனால் அவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட குண்டுகள் மற்றும் வகைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு தங்கள் நாட்டிலிருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டும்.

அனுமதிக்கப்படும் ஆயுதங்கள்:

  • வேட்டை துப்பாக்கிகள்
  • 9 மி.மீ காலிபர் வரையான கைத்துப்பாக்கிகளுக்கு அனுமதி
  • பாரம்பரிய வாள்கள்
  • வேட்டை கத்திகள்
  • மர மற்றும் பிளாஸ்டிக் வில் அம்புகள்

செப்டம்பர் முதல் 2 அக்டோபர் 2, 2022 வரை நடைபெறும், ADIHEX சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியை ஃபால்கனர்ஸ் கிளப் (EFC) ஏற்பாடு செய்து, அபுதாபி, ஹூபரா பாதுகாப்புக்கான சர்வதேச நிதியம் (IFHC) மற்றும் அபுதாபி தேசிய கண்காட்சி மையத்ததில் நடைபெற இருக்கிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap