ஷார்ஜாவில் தனது வசிப்பிடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இந்தியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் குறித்த விசாரணையை முடிக்கிவிட்டிருக்கிறது காவல்துறை.
தற்கொலை செய்துகொண்டவரின் அறையில் தங்கியிருந்தவர்கள் அளித்த தகவலையடுத்து தேசிய ஆம்புலன்ஸ், மீட்புப்படை, காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் செல்லும்போது இளைஞர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலைக் கைப்பற்றிய காவல்துறை பிணக்கூராய்வு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது.
தனிப்பட்ட கஷ்டங்கள் காரணமாக எழுந்த மன அழுத்தம் தான் அவரது தற்கொலைக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும் காவல்துறை இதுகுறித்து அவருடன் பணிபுரிந்த மற்றும் தங்கியிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.
முழு விசாரணை நடந்த பிறகே, இளம் இந்தியரின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தெரியவரும்.