UAE Tamil Web

துபாயில் 20 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரம்.. “பிளான் போட்டு திருடிய 3 வெளிநாட்டினர்”.. Airportல் வைத்து தூக்கிய போலீசார் – அடுத்து நடந்து என்ன?

துபாயில் பணப் போக்குவரத்து நிறுவனத்தில் (Money Transport Company) இருந்து சுமார் 20 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரத்தை திருடியதற்காக 3 வெளிநாட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றம், திருடப்பட்ட வைரத்தின் மதிப்பை குற்றவாளிகள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. விசாரணைப் பதிவுகளின்படி, குற்றவாளிகளில் ஒருவர், பணப் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இரண்டு சக ஊழியர்களின் உதவியுடன், குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒரு வைரத் துண்டைத் திருட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வைரத்தை பாதுகாப்பாக வைக்க உதவும் CCTV கேமராக்களின் ஓட்டத்தையும் திருடும் முன் கண்காணித்துள்ளனர்.

சம்பவத்தன்று, குற்றவாளிகள் மூவரும் டூப்ளிகேட் சாவியைப் பயன்படுத்தி நிறுவனத்திற்குள் நுழைந்து வைரத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் திருடிய வைரத்தை தங்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளனர்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை துபாய் போலீசார் கைது செய்து, வைரத்தை மீட்டனர். கைதான மூவரில் இருவருக்கு நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர்கள் தண்டனை காலம் முடிந்ததும் துபாயில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

வெளிநாடுகளில் இருந்து அமீரகத்திற்கு உழைக்க வரும் தொழிலாளர்களுக்கு இங்கு பல சலுகைகள் வழங்கப்படுகிறது. ஏன் துபாயை நம்பி வந்து இன்று செல்வந்தர்களான பல தொழிலாளர்கள் இங்கு உண்டு. ஆனால் சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு சில நேரங்களில் சிலர் செய்யும் தவறுகள், அவர்கள் வாழ்க்கை பாதையையே மாற்றிவிடுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap