புனித ரமலான் மாதம் தொடங்கியதில் இருந்து 94 பிச்சைக்காரர்களை ஷார்ஜா போலீசார் கைது செய்துள்ளனர்.
பல பிச்சைக்காரர்கள் தங்கள் பெரிய தொகையுடன் பிடிபட்டுள்ளனர். அதில் ஒருவரிடம் 44,000 திர்ஹம்ஸும், மற்றொருவரிடம் 9,000 திர்ஹம்கஸ் இருந்தது. மேலும் ஒரு பிச்சைக்காரரிடம் 12,000 திர்ஹம்ஸ் இருந்தது.
அமீரகத்தின் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்த ரமலான் மாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிச்சைகாரர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஷார்ஜாவில் பிச்சை எடுப்பதைக் கட்டுப்படுத்தும் குழுவின் தலைவரான கர்னல் ஜாசிம் முகமது பின் தாலியா கூறுகையில், “கைது செய்யப்பட்ட பெரும்பாலான குற்றவாளிகள் விசிட் விசாவில் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 94 பிச்சைக்காரர்களில், 65 பேர் ஆண்கள் மற்றும் 29 பெண்கள் ஆகும். அமீரகம் முழுவதும் பிச்சைக்காரர்களை பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பிச்சை எடுத்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1409 ஐ எட்டியுள்ளது என்றும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொத்தத் தொகை 50 மில்லியன் திர்ஹம்களைத் தாண்டியுள்ளது” என்றார்.
பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைத்து குற்றவாளிகள் குறித்து புகார் அளிக்க வேண்டும் என்றும் ஜாசிம் முகமது பின் தாலியா கேட்டுக் கொண்டார்.