துபாயில் ரமலான் மாதத்தின் முதல் 10 நாட்களில் ஏற்பட்ட 47 போக்குவரத்து விபத்துக்களில் 3 வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ரமலான் போது ஏற்பட்ட 29 விபத்துகளில் 1 மரணம் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில் தற்போது இந்த வருட புள்ளிவிவரங்கள் அதிகமாகியுள்ளது.
இது தொடர்பாக துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொது இயக்குநர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் தெரிவிக்கையில், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுதல், வேகமாக செல்லுதல், வாகனங்களுக்கு இடைவெளி விடாமல் செல்வது, மற்ற வாகனத்தை முந்திச் செல்வது, உடல் நலக்குறைவின் போது வாகனம் ஓட்டுவது என சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் விபத்துக்கள் ஏற்படுகிறதாக ககூறினார்.
குறிப்பாக ரமலான் மாதத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும், இஃப்தாரர் நெருங்கும் நேரங்களில் வாகனம் ஓட்டும் போது நிதானமாக செல்லுமாறு அதிகாரிகள் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டனர்..
துபாய் காவல்துறையின் இப்தார் நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, ரமலானின் முதல் 10 நாட்களில் 63,800 இஃப்தார் உணவுகளை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கியுள்ளனர்.
துபாய் காவல்துறையின் பொது செயல்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் கர்னல் துர்கி பின் ஃபரிஸ் கூறுகையில், “அவசர எண் (999) அல்லது துபாய் போலிஸ் செயலியின் ‘SOS’ சேவை மூலம் அவசர நேரங்களில் துபாய் காவல்துறைக்கு தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது” என்றார்.