UAE Tamil Web

அமீரகத்தில் வேலையிழந்து இந்தியா சென்ற 3 லட்சம் தொழிலாளர்கள்!

கொரோனா நோயால் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வந்த ஏராளமான இந்திய தொழிலாளர்கள் தாய் நாட்டுக்கு திரும்பினர்.

இந்நிலையில் இந்திய அரசின் கணக்கீட்டின்படி, கொரோனா நோய் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து 7 லட்சத்திற்கும் அதிகமான இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

இதில் அமீரகத்திலிருந்து 716,662 தொழிலாளர்களில் 330,058 பேர் இந்தியாவுக்கு திரும்பினர். சவுதியிலிருந்து 137,900 பேரும், குவைத்தில் இருந்து 97,802 பேரும் மற்றும் ஓமனில் இருந்து 72,259 பேரும் நாடு திரும்பினர்.

கொரோனா தொற்றால் வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் இந்திய அரசு பாரத் மிஷன் என்றத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பி வந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “வளைகுடாவிற்கு தொழிலாளர்களை மீண்டும் அனுப்பவுள்ளோம். பலர் தங்கள் பழைய வேலைகளைத் திரும்ப பெறுதல், வேலைகளைத் தக்கவைத்தல், ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்தல், தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்துதல் போன்றவற்றுகாக வளைகுடா நாடுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.

2 Shares
Share via
Copy link