61வது வாராந்திர நேரடி மஹ்சூஸ் கிராண்ட் டிராவில் முப்பத்து மூன்று அதிர்ஷ்டசாலிகள் இரண்டாம் பரிசான Dh1,000,000 திர்ஹம்களை பகிர்ந்து கொண்டனர்.
1, 3, 20, 21, 36 ஆகிய ஐந்து வெற்றி எண்களில் நான்கைப் பொருத்திய பின்னர் அதிர்ஷ்டசாலிகள் தலா 30,303 திர்ஹம்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
கூடுதலாக, 1,331 பங்கேற்பாளர்கள் ஐந்து எண்களில் மூன்றைப் பொருத்தி, தலா 350 திர்ஹம்களை மூன்றாவது பரிசைப் பெற்றனர். ரேஃபிள் டிராவில் மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தலா 100,000 திர்ஹம்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
வெற்றி பெற்ற ரேஃபிள் ஐடிகள் முறையே அஷ்ரஃப், ஷோக்ரோல்லா மற்றும் வில்லிக்கு சொந்தமான 10258369, 10391590, 10418498. நேற்று இரவு நடந்த டிராவில் வென்ற மொத்த பரிசுத் தொகை 1,765,850 திர்ஹம்கள்.
10,000,000 திர்ஹம்கள் வெல்வதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது. வரும் சனிக்கிழமை அதாவது ஜனவரி 29ந் தேதி அமீரக நேரப்படி, இரவு 9:00 மணிக்கு கிராண்ட் டிரா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.