சவூதி அரேபியா இன்று தனது 91 வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. இதனையடுத்து துபாய் முழுவதும் பல்வேறு முக்கிய இடங்கள் சவூதியின் தேசிய கொடியின் வண்ணமான பச்சை நிறத்தில் இன்று மிளிர இருக்கின்றன.
துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபா சவூதியின் தேசியக்கொடியின் நிறமான பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் மிளிர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து துபாய் ஃபவுண்டைனில் சவூதி தேசிய கீதம் இசைக்கப்பட இருக்கிறது. வியாழன் இரவு 8 – 9 மணிவரையில் இந்நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இன்று இரவு 3 நிமிடங்களுக்கு வான வேடிக்கைகளை விண்ணை அதிரவைக்க இருக்கின்றன. புர்ஜ் அல் அரப் கட்டிடத்தில் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
அதேபோல ஸபீல் பார்க்கில் உள்ள புகழ்பெற்ற பிரேம் பச்சை நிறத்தில் ஒளிர இருக்கிறது. மேலும், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் சிறப்பு IMAGINE நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இரவு 8 மணி முதல் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் தி பாய்ண்டீ -யில் உள்ள தி பாம் ஃபவுண்டைனிலும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Museum of Future மற்றும் Ski Dubai ஆகியவையும் பச்சை நிறத்தில் ஒளிரும்.
துபாய் அக்வேரியமின் உள்ளே பச்சை வண்ணம் விரிய உள்ளது. அதுமட்டுமல்லாமல் காலை 11.45, மதியம் 2.45 மற்றும் 4.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
துபாய் டால்பினேரியம்-ல் டால்பின் மற்றும் சீல் நிகழ்ச்சிகளுக்கு செப்டம்பர் 23-25 வரையில் டிக்கெட்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் டிக்கெட் வாங்குகையில் DTCM50 என்ற ப்ரோமோ கோடைப் பயன்படுத்தவும்.
