UAE Tamil Web

துபாயில் ஆண் நபரை நிர்வாணமாக படம்பிடித்து மிரட்டிய 3 பெண்களுக்கு 28 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம்..!

துபாயில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் நபரை தாக்கிய மூன்று ஆப்பிரிக்கப் பெண்களுக்கு 28 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு பெண் வாட்ஸ் அப்பில் ஐரோப்பிய பெண் போல வேடமணிந்து அந்த நபரை ஏமாற்றியுள்ளார். உண்மை என நம்பிய அந்த நபர் ஹோட்டலில் இரவு உணவிற்குச் சந்திக்க ஒப்புக்கொண்டனர்.

பின்னர் அவர் ஹோட்டலுக்கு வந்ததும், அந்த பெண் தனது தோழிகளையும்  வேடமிட்டபடி அழைத்துவந்து பதுங்க வைத்துள்ளார். அதனை அடுத்து நாடகமாடி 120 திர்ஹம்ஸை உட்பட அவரது கிரெடிட் கார்டை அப்பெண்கள் திருடிச் சென்றனர்.

அப்போது அந்த பெண்கள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆயிரம் திர்ஹம்ஸை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

மேலும், தனது ஆடைகளை அவிழ்த்து படம்பிடித்ததனர், நான் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றதால், என்னை அதிகாலை 5 மணி வரை கட்டி வைத்தனர். ஆனால், மூவரும் வெவ்வேறு டாக்சிகளில் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர் என்று அவர் கூறினார்.

அந்த பெண்களில் ஒருவரைப் பின்தொடர்ந்து, நடந்த சம்பவத்தை காவல்துறைக்கு பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

இதனை அடுத்து துபாய் ரோந்து வாகனம் மூலம் மூன்று பெண்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap