UAE Tamil Web

டேலண்ட் இருக்கா? – 3 வருட டேலண்ட் பாஸ் விசா உங்களுக்கு தான்- விவரம் உள்ளே!

ஃப்ரீலான்ஸ் வேலைக்காக ‘டேலண்ட் பாஸ்’ என்ற புதிய உரிமத்தை துபாய் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள சிறப்புத் திறன்கள் மற்றும் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு இந்த புதிய உரிமம் கிடைக்கும். இது ஊடகம், கல்வி, தொழில்நுட்பம், கலை, சந்தைப்படுத்தல் மற்றும் ஆலோசனை ஆகிய துறைகளில் உலகளாவிய திறமையாளர்களையும் நிபுணர்களையும் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

துபாய் ஏர்போர்ட் ஃப்ரீஸோனானது (DAFZ) துபாய் கலாச்சாரம் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்துடன் (GDRFA) இணைந்து, இந்த புதிய முயற்சியை எளிதாக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் தங்கள் வணிகத்தை நிறுவுதல், இயக்குதல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குகிறது.

DAFZ வழங்கும் அலுவலக இடத்தை வாடகைக்கு எடுப்பதுடன், மூன்று வருடங்களுக்கான குடியிருப்பு விசாவைப் பெறுவதற்கு ‘டேலண்ட் பாஸ்’ அதன் உரிமையாளரைத் தகுதிப்படுத்துகிறது. மேலும் அவர்களுக்கு அலுவலகம் தொடர்பான தீர்வுகள், செயல்பாட்டு செலவுகள் மற்றும் தொலைத்தூரத்தில் இருந்தே சேவைகளைப் பெரும் வாய்ப்பு போன்ற பல்வேறு வசதிகளை இந்த ‘டேலண்ட் பாஸ்’ விசா வழங்குகிறது

உரிமம் வைத்திருப்பவர்கள் சர்வதேச நிறுவனங்கள் முதல் SMEகள் மற்றும் தொழில்முனைவோர் வரையிலான DAFZ வாடிக்கையாளர்களின் நெட்வொர்க்கை அணுகலாம்.

வேலை, ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகளுக்கான எளிதான அணுகலுக்காக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் இலவச மண்டலத்தின் டிஜிட்டல் தளத்திற்கான அணுகலையும் அவர்கள் பெறுவார்கள். வாடிக்கையாளர்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பையும் இதன் மூலம் அவர்கள் பெறலாம்.

DAFZ ஆனது 20 க்கும் மேற்பட்ட முக்கிய பொருளாதாரத் துறைகளில் 1,800 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.

இந்த முயற்சி வணிகச் சூழலை மேலும் உயிர்ப்பூட்டுவதாகவும், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் திறமையாளர்களுக்கான உலகளாவிய இடமாக துபாயின் நிலையை வலுப்படுத்துவதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, DAFZ ‘டேலண்ட் பாஸிற்கான’ விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து செயலாக்கும். அத்துடன் இலவச மண்டலத்திற்குள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமையாளரை அங்கீகரிக்கும் உரிமங்களை வழங்கும்.

இந்த பொருந்தக்கூடிய உரிமம் வைத்திருப்பவர்களுக்கு துபாய் கலாச்சாரம் ‘கலாச்சார விசா’வை ஆதரிக்கும். GDRFA ஆனது DAFZ ஐ உலகளாவிய வணிகங்களுக்கான விருப்பமான இடமாகவும், துபாயை வணிக நட்புச் சூழலாகவும் ஊக்குவிக்கும். இது திறமையானவர்களை அடையாளம் காண்பதுடன், பெரிய நுகர்வோர் சந்தையில் தங்கள் வரம்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.

“இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் வணிக, முதலீடு மற்றும் ஆக்கப்பூர்வமான துறைகளின் பங்கை மேம்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான திட்டங்களை வழங்கும்” என துபாயின் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலங்கள் ஆணையத்தின் செயல் தலைவர் டாக்டர் முகமது அல் ஜரூனி தெரிவித்துள்ளார்.

“இந்த உரிமம் துபாயில், குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், மாறிவரும் சந்தைத் தேவைகள் மற்றும் வளர்ந்து வரும் வணிகச் சூழலுக்குப் பிரதிபலிப்பாக இருக்கும். மேலும், இந்த உரிமம் துபாய்க்கு பல புதுமையாளர்களை ஈர்ப்பதுடன்,  பலவிதமான திறன்களைக் கொண்ட நிபுணர்களுக்கான அணுகலை விரிவுபடுத்தும்” என்றும் டாக்டர் அல் ஜரூனி கூறினார்.

4 Shares
Share via
Copy link