UAE Tamil Web

அமீரகத்தில் 3,184 பேர் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தனர்..!

prayer

அமீரகத்தில் இந்த வருடம் மட்டும் 3,184 பேர் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டுள்ளதாக இஸ்லாமிய கலாச்சாரத்துக்கான முகமது பின் ரஷீத் மையம் தெரிவித்திருக்கிறது. கொரோனா காரணமாக இஸ்லாத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவே பெற்றதாக கலாச்சார மையம் தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

இந்த மையத்தின் இயக்குனர் ஹிந்த் முகமது லூடா இதுகுறித்துப் பேசுகையில்,” முகமது பின் ரஷீத் மையம் இஸ்லாத்தைப் பற்றிய சரியான செய்தியைத் தொடர்ந்து அளித்துவருகிறது. மேலும் துபாயில் வாழும் பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகளைக்கொண்ட மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் உயர்ந்த கொள்கைகளை பரப்புவதை நோக்கமாகக்கொண்டு இம்மையம் செயல்படுகிறது” என்றார்.

“புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களிடம் மையம் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறது. அவர்களுக்கான மத, சமூக, கலாச்சார மற்றும் கல்வி குறித்த உதவிகளை இம்மையம் வழங்கிவருகிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விரும்புவோரின் விண்ணப்பங்கள்  www.iacad.gov.ae என்ற இணையதளம் மூலமாகவும் 800600 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன” என லூடா தெரிவித்தார்.