UAE Tamil Web

துபாய் சாலை விபத்து : 34 வாகனங்கள் சேதம் – 2 பேருக்கு பலத்த காயம்..!

NAT-ACCIDENT-

துபாயில் உள்ள எமிரேட்ஸ் சாலையில் தூசுப் புயல் காரணமாக நேற்று நிகழ்ந்த விபத்தில் 34 கார்கள் சேதமடைந்திருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து நடைபெற்ற உடனே காவல்துறை வெளியிட்ட முதற்கட்ட தகவலில் 15 வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஷார்ஜா செல்லும் எமிரேட்ஸ் சாலையில் அல் குத்ரா மேம்பாலத்தைத் தாண்டி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழுதிப் புயலால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு இயக்குனர் பிரிகேடியர் சைஃப் அல் மஸ்ரோயி,” இந்த விபத்தினால் இரண்டுபேர் பலத்த காயமடைந்ததாகவும் ஒருவர் மிதமான காயத்தோடும் இன்னொருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

வாகனவோட்டிகள் கவனமாக பயணத்தைத் தொடருமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

NAT-ACCIDENT-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap