UAE Tamil Web

அபுதாபி: 350 அமீரக வாழ் தமிழ் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்திய அய்மான் சங்கம்..!

aimaan sangam

அமீரக வாழ் தமிழர்களுக்கு எப்போதும் உறுதுணையாக விளங்கும் அய்மான் சங்கம், நேற்று மற்றுமொரு மருத்துவ முகாமை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

அபுதாபி அய்மான் சங்கத்தில் பதிவு செய்த சுமார் 350 உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகத்தின் துணையுடன் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card உம் வழங்கப்பட்டிருக்கிறது.

அபுதாபியின் எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள மெசைனைன் தளத்தில் (Mezzanine Floor) நேற்று காலை 9 முதல் மாலை 5 வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் அவர்களின் ஆலோசனைப்படி, அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் மதுக்கூர் ஒய்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி, பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், துணைப் பொருளாளர்
பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா, நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், மக்கள் தொடர்புச் செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன், நிர்வாக செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஏ.ஹெச்.சயீத் முஹம்மது பாசில் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதேபோன்று கடந்த 04/06/2021 அன்று 350 குடும்பங்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

aimaan sangam
4 Shares
Share via
Copy link