34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

ஐக்கிய அரபு அமீரகத்தில் 36 நிறுவனங்கள் மூடல்..!

அஜ்மான் முனிசிபாலிடியின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, சுகாதார விதிமுறை ஒழுங்குகளை மீறியதற்காக சுமார் 36 விற்பனை நிலையங்களை அதிரடியாக மூடியுள்ளது.

இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டதில் தவறிழைத்த விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக துறையின் நிர்வாக இயக்குநர் Eng. காலிட் முயீன் அல் ஹொசனி தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில், 279 விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் சுமார் 2,256 எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆய்வில் அதிரடியாக 36 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, நுகர்வோரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும், விதி மீறல்களைத் தடுப்பதற்கும் கூடுதல் ஆய்வு நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மீறல்கள் உணவு மற்றும் சுகாதாரம் தொடர்பானவை என்றும் கூறப்பட்டுள்ளது.

Source : Khaleej Times

இதையும் படிங்க.!