UAE Tamil Web

கோவிட்-19: அமீரகத்தின் கேடயமாக இருக்கும் 4 தடுப்பூசிகள்.! என்ன வித்தியாசம், இவை எவ்வாறு செயல்படுகின்றன?

vaccine1

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக தற்போது அமீரகத்தில் 4 கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் கொரோனா பாதிப்பு வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இங்கு பயன்படுத்தப்பட்டு வரும் பல வகையான தடுப்பூசிகளை பற்றி நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான சோதனைகளை மேற்கொண்ட பின்னர் விருப்ப அடிப்படையில் குடிமக்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் அமீரகம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி சினோஃபார்ம்(Sinophram) தடுப்பூசி ஆகும். இதை தொடர்ந்து ஃபைசர்-பயோஎன்டெக்(Pfizer-BioNTech) தடுப்பூசிக்கு துபாயில் டிசம்பர் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது.

vaccine

இதனிடையே ஜனவரியில் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி(Sputnik V) அங்கீகரிக்கப்பட்டது. சமீபத்தில் துபாயில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா(Oxford-AstraZeneca) தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அமீரகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மேற்காணும் 4 தடுப்பூசிகள் குறித்தும், இவற்றுக்கிடையே என்ன வித்தியாசம், இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி பற்றிய கேள்விகளுக்கு அமீரக உயர் சுகாதார அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தடுப்பூசியும் ஒரு நபரின் உடலுக்குள் சென்று என்ன செய்கிறது என்பதை அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹோசானி விளக்கம் அளித்துள்ளார். கோவிட் தொற்றை எதிர்த்துப் போராட தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க நம் உடலைத் தூண்டும் என்ற வகையில் மேற்காணும் அனைத்து தடுப்பூசிகளுமே ஒரே மாதிரியானவை தான்.

தடுப்பூசிகளில் உள்ள வேறுபாடுகள் மற்றும் அவை எவ்வாறு தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன என்பதில் பலர் கவனம் செலுத்துகின்றனர். வேறுபாடுகள் இருந்தாலும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம், இவை அனைத்துமே வைரஸை எதிர்க்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்று டாக்டர் அல் ஹொசானி கூறினார். மேலும் ஒவ்வொரு தடுப்பூசியும் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அவர் விளக்கினார்.

சினோஃபார்ம்(Sinophram)

சினோஃபார்ம் தடுப்பூசியானது இறந்த வைரஸ் துகள்களை பயன்படுத்தி எதிர்வினை ஆபத்து ஏதுமின்றி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை தொற்று வைரஸுக்கு எதிராக வெளிப்படுத்துகிறது. இந்த தடுப்பூசி மனித நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் மற்றும் கோவிட் -19 வைரஸை எதிர்க்க ஆன்டிபாடிகளை உருவாக்கும் என்றார்.

ஃபைசர்-பயோஎன்டெக்(Pfizer-BioNTech)

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியானது ஆர்.என்.ஏ டெக்னாலஜியுடன் செயல்படுகிறது. இந்த டெக்னாலஜிபடி வைரஸினுடைய மரபணு குறியீட்டின் ஒரு பகுதி உடலில் செலுத்தப்பட்டு,அந்த வைரஸின் ஷெல்லில் எஸ்-புரதத்தை(s-protein) உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறது.

ஸ்புட்னிக் வி மற்றும் அஸ்ட்ராஜெனெகா:

ஸ்புட்னிக் வி மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இரண்டுமே வைரல் வெக்டாரை(viral vector) அடிப்படையாக கொண்டவை. இவை அடினோவைரஸ் எனப்படும் மற்றொரு வைரஸில் வைக்கப்படுகிறது. இது மாற்றியமைக்கப்பட்டு பின் வளர்ந்து வரும் கோவிட் -19 வைரஸின் மூலக்கூறுகள் அதில் சேர்க்கப்படுகின்றன. இப்படி வைக்கப்படும் வைரஸ் பலவீனமாகக் கருதப்பட்டாலும் அவை ஆன்டிபாடிகளை உருவாக்க போதுமானது என்று விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் ஃபரிதா.

vaccine1
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap