அமீரகத்தின் 50 வது தேசிய தினம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனைமுன்னிட்டு துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் குழந்தைகளுக்கான விமானக் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.
வரவிருக்கும் குளிர்கால விடுமுறை மற்றும் அமீரக தேசிய தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு இந்த ஆஃபரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும், சுற்றுலா மற்றும் தங்களது அன்புக்குரியவர்களை காணச் செல்பவர்களுக்கு இந்தத் தள்ளுபடி பயனுள்ளதாக இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் winter break and beyond என்னும் திட்டத்தின்கீழ் 1,395 திர்ஹம்சிலிருந்து எமிரேட்ஸ் விமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இந்த ஆஃபரை பயன்படுத்தி ஜூன் 15, 2022 ஆம் தேதிக்குள் பயணிக்க இன்று முதல் டிசம்பர் 5, 2021 ஆம் தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விலையில் கிடைக்கும் சில இடங்கள் மற்றும் கட்டண விபரம் (திர்ஹம்ஸ்களில்)
லண்டன்
எக்கானமி – 2,195
பிசினஸ் – 11,255
பேங்காக்
எக்கானமி – 2,045
பிசினஸ் – 8,555
குவைத்
எக்கானமி – 1,395
பிசினஸ் – 6,995
நியூயார்க்
எக்கானமி – 3,195
பிசினஸ் – 14,555
மொரிஷீயஸ்
எக்கானமி – 4,145
பிசினஸ் – 11,555
எமிரேட்ஸ் ஹாலிடேஸ் மூலமாக ஹோட்டல்களை முன்பதிவு செய்பவர்களுக்கு ஹோட்டல் கட்டணத்தில் 50% தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
