துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நான்கு நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று கூறியுள்ளது. மேலும் புதிய பேருந்து வழித்தடத்தை – ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி வரை நீடிக்கவும் உள்ளது.
மேற்குறிய இந்த சேவைகள் நாளை 19 மே வியாழக்கிழமை முதல் துவங்கும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. RTAவின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷகேரி கூறியதாவது..
“துபாயில் இருந்து மீண்டும் தொடங்கப்படும் நான்கு நகரங்களுக்கு இடையேயான பேருந்து வழித்தடங்கள் : அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபிக்கு E100; அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அல் ஐனுக்கு E201; E315 எடிசலாட் மெட்ரோ நிலையத்திலிருந்து முவைலே, ஷார்ஜா வரை; மற்றும் E700 Etihad பேருந்து நிலையத்தில் இருந்து Fujairah வரை” செயல்படுத்தப்படும் என்றார்
அவர் மேலும் கூறியதாவது: நாளை “மே 19 முதல் F38 என பெயரிடப்பட்ட புதிய மெட்ரோ இணைப்புச் சேவையானது ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கி பல மாவட்டங்கள் வழியாக துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியை அடையும் என்றார்.
துபாய் புரொடக்ஷன் சிட்டி வழியாக ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி இடையேயான ரூட் F38, காலை 6 மணிக்கு இயங்கத்துவங்கி 20 நிமிட இடைவெளியில் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கும்.
இந்த புதிய சேவை மூலம், பயணிகள் பலர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, “RTA எப்போதும் சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சிறந்த மற்றும் மிகவும் பாதுகாப்பான பொது போக்குவரத்து தீர்வுகளை வழங்க ஆர்வமாக உள்ளது.
துபாய் முழுவதும் பொதுப் பேருந்துகள் உட்பட பாதுகாப்பான மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்து தீர்வுகளை வழங்க அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து RTA செயல்படுகிறது.