21.9 C
Dubai
October 31, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் மனிதரைப்போல கொசுவை ஈர்க்கும் ஸ்மார்ட் கொசு பொறி.! அப்படியென்றால்.?

mosquito trap in UAE

கொசுக்களைப் தடுக்க பிப்ரவரி 1 முதல் அமீரகம் முழுவதும் 400 க்கும் மேற்பட்ட சூரியசக்தியால் இயங்கும் ஸ்மார்ட் பொறிகளை நிறுவி, இதனால் மலேரியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் வெஸ்ட் நைல் வைரஸ் போன்ற நோய்கள் உருவாகாமல் முன்னெச்சிரிக்கையாக இருப்பதை சரிபார்க்கவும் என்று அபுதாபி கழிவு மேலாண்மை மையத்தின் (தத்வீர்) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குடியிருப்பாளர்களுக்கு நோய் இல்லாத சூழலை உறுதி செய்வதற்காக, கொசுக்களைப் தடுக்க இந்த திறமையான மற்றும் நிலையான வழியை தட்வீர் உருவாக்கியுள்ளது.

“மழை மற்றும் குளிர்காலத்தில், நம் அனைவரிடமும் ஏராளமான தேங்கி நிற்கும் நீர் தேக்கங்கள் பல உள்ளன. அதனால் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அதிகரிக்கின்றன. எனவே நோய்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. இதனை சரி செய்ய அபுதாபி அரசாங்கம் 440 கொசு பொறிகளை வாங்கியுள்ளது. உலகளவில் எந்தவொரு அரசாங்க நிறுவனத்துடனும் ஒப்பிடும்போது, இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் நோய்வாய்ப்படும் வரை நாங்கள் காத்திருக்கவில்லை. மக்களைப் பாதுகாப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த முறையை நாங்கள் கொண்டு வருகிறோம். ஸ்மார்ட் கொசு பொறி, மனிதர்களைப் போலவே, கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு கொசுக்களை ஈர்க்கும், பின்னர் அவற்றை வலையில் உறிஞ்சும். இது எங்கள் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்படும், இதனால் கணினிகள் அல்லது மொபைல்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்” என்று திட்ட இயக்குனர் முகம்மது அல் மர்ஜூகி அமீரக ஊடகமான கலீஜ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

பொறி தவிர, ஒரு வலை பயன்பாடு (Web Application) மற்றும் ஜி.பி.எஸ் இருப்பிடம் மூலம், தட்வீர் கொசு பொறிகளை நிர்வகிக்கலாம். அதுமட்டுமில்லாமல் அன்றாட முறைகள், அடர்த்தி, மக்கள் தொகை போன்றவற்றைப் பற்றிய நுண்ணறிவுகளையும் பெறலாம். கூடுதலாக இந்த பொறிகள் அனைத்தும் ஒரு தரவுத்தளத்தின் (Database) மூலம் இணைக்கப்பட்டு பகுப்பாய்விற்கும் மற்றும் ஏதேனும் நோய்கள் பரவுவதைக் கண்டறியவும் உதவுகின்றன.

“சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த வகை கொசுக்கள் காணப்படுகின்றன என்பதை அறிய உதவும். கழிவுநீரில் காணப்படும் கொசுக்கள் மற்றும் நன்னீரில் பொதுவாகக் காணப்படும் பிற வகைகள் என்று பல வித கொசுக்கள் உள்ளன. அந்த தகவலின்படி கொசுக்கள் பகல் நேரத்தில் அதிகம் உள்ளதா அல்லது மாலை நேரங்களில் உள்ளதா என்பதை கண்டறியலாம்.” என்று அல் மர்ஜூகி கூறினார்.

இது எப்படி செயல்படுகிறது?

“சிக்கியுள்ள கொசுக்களின் எண்ணிக்கையை இந்த அமைப்பு முழுமையாகக் கொடுக்கும். ஒரு கொசு பிடிபடும் போதெல்லாம், அது ஒரு எச்சரிக்கையை அனுப்பும். பின்னர் தகவல்கள் சேகரிக்கப்பட்டவுடன், அந்த குறிப்பிட்ட நேரங்களில் எங்கள் பூச்சி கட்டுப்பாட்டுக் குழுவை அனுப்பலாம். மேலும் இது சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியின் அளவைக் குறைக்கவும் உதவும். இதனால் மேலாண்மை மற்றும் செயல்பாட்டு செலவு குறைவாக இருக்கும்.” என்றும் அவர் கூறுகின்றார்.

இந்த பொறி ஒரு வருடம் சோதிக்கப்பட்டது. தற்போது இது அமீரகம் முழுவதும் பயன்படுத்தப்படும். இந்த பொறி ஜெர்மனியை தளமாகக் கொண்ட பயோஜென்ட்களால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது, அதேசமயம் அமெரிக்காவில் வாங்கப்படுகின்றது.

மேலும் இந்த பொறி அமீரகத்தின் சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இதனை தொழில்துறை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் பண்ணைகளில் உபயோகப்படுத்தலாம். இந்த பொறிகளை பொது பயன்பாட்டிற்கு வாங்குவதற்கு தலா 15,000 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.error: Alert: Content is protected !!