அபுதாபியில் லாரிக்குள் மறைத்து வைத்திருந்த 450 கிலோ போதை மருந்துகள் – அதிர்ச்சி காணொளி!

450kg drugs seized in Abu Dhabi

அபுதாபியில் 450 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு லாரிக்குள் மறைத்து வைத்திருந்த 450 கிலோ போதை மருந்துகளை அபுதாபி போலீசார் பறிமுதல் செய்ததாக, தனது ட்விட்டர் கணக்கில் சனிக்கிழமை இன்று தெரிவித்தனர்.

அபுதாபி போலீசார் வெளியிட்டுள்ள அந்த அதிர்ச்சி வீடியோவில், ஒரு தொழிற்துறை இயந்திரத்தைப் பயன்படுத்தி லாரிக்குள் இருந்து போதைப்பொருட்களை அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தார்கள், என்பதை காவல்துறையின் தொழில்நுட்பக் குழு நமக்கு விளக்குகிறது.

போதைப்பொருள் விற்கும் கடத்தல் கும்பல் அதை அபுதாபியில் விற்கவும், மேலும் அவற்றை ஊக்குவிக்கவும் விரும்பியதாக, போலீசார் கூடுதலாக தெரிவித்துள்ளனர்.

Loading...