பொதுத் துறையில் ஆள்மாறாட்டம் செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அமீரக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமீரக புதிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 299ஐ மேற்கோள் காட்டி, பொதுத் துறையில் சட்ட விரோதமாக அடுத்த ஊழியரின் பணிகளைச் செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அமீரக அரசு தெரிவித்துள்ளது.
அது போன்று காவலர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் குற்றவாளிகளுக்கும் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
சமீபத்தில் தனது 50 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய சட்டச் சீர்திருத்தங்களை அறிவித்த அமீரகம், தற்போது புதிய சட்டத் திருத்தங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பொது வழக்கறிஞர்கள் குழு சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.