UAE Tamil Web

இன்னும் 50 நாட்களில் அமீரகத்தின் 50 வது தேசிய தினம் – துபாய் ஆட்சியாளர் மற்றும் அபுதாபி இளவரசர் வெளியிட்ட மாஸ் ட்வீட்..!

dubai ruler and abudhabi prince

அமீரகம் ஒன்றினைந்ததன் 50 வது ஆண்டுவிழா இன்னும் 50 நாட்களில் (டிசம்பர் 2, 2021) வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அமீரகத்துடன் மக்களின் மனது ஒன்றிணைந்திருக்கிறது. அமீரக தேசிய கொடியின் கீழ் இந்நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” இன்னும் 50 தினங்களில் நமது நாடு 50வது தேசிய தினத்தைக் கொண்டாட இருக்கிறது. பல மைல்கற்களைப் படைத்திருக்கும் நம்முடைய சாதனைகளுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி. நமக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலம் காத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

dubai ruler and abudhabi prince
0 Shares
Share via
Copy link