UAE Tamil Web

போக்குவரத்து அபராத தொகையில் 50% தள்ளுபடி – உம் அல் குவைன் காவல்துறை அறிவிப்பு!

அமீரக பொன் விழாவை முன்னிட்டு உம் அல் குவைன் காவல்துறை அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்னர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வழங்கப்பட்ட அபராத தொகையில் 50% தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியானது பிற உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல செயல்பட்டது, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதது உள்ளிட்டவற்றின் கீழ் பதிவான வழக்குகளுக்கு பொருந்தாது எனவும் உம் அல் குவைன் காவல்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 5ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை இந்த தள்ளுபடிகள் பொருந்தும் எனவும் ஆகஸ்ட் 1 க்கு முன்னதாக பதிவான வழக்குகளுக்கு உடனடியாக அபராதத் தொகையை செலுத்தி பயன்பெறவும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

0 Shares
Share via
Copy link