UAE Tamil Web

50 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த அபுதாபி ஆட்சியாளர்..!

marriage

அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு அபுதாபியில் 50 எமிராட்டி ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நிகழ்ந்திருக்கிறது. அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவுக்கு இணங்க இந்த பிரம்மாண்ட திருமணம் நடைபெற்றிருக்கிறது.

அல் தஃப்ரா பகுதிக்கான அபுதாபி ஆட்சியாளரின் பொறுப்பாளர் ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவருடன் அபுதாபியின் மூத்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

எமிராட்டி மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திருமணம் நடத்தப்பட்டதாக ஹம்தான் குறிப்பிட்டார். அபுதாபி அரசால் நடத்தப்படும் 17 வது பிரம்மாண்ட திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய வழிகடடுதலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஹம்தான் குறிப்பிட்டார்.

marriage
0 Shares
Share via
Copy link